தர்மபுரி, நவ.17: தர்மபுரி நகர கூட்டுறவு வங்கியில், பொது மருத்துவ முகாம் நேற்று நடந்தது. 71வது அனைத்து இந்திய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு, தர்மபுரி நகர கூட்டுறவு வங்கியில் பொது மருத்துவ முகாம் நேற்று நடந்தது. முகாமினை கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் சரவணன், மத்திய கூட்டுறவு வங்கியின் இணை பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குனர் மலர்விழி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
முகாமில், அனைத்து வகையான நோய்கள் தொடர்பான பரிசோதனைகள் நடந்தது. இதில் வாடிக்கையாளர்கள், வங்கி ஊழியர்கள், பொதுமக்கள்என 200க்கும் மேற்பட்டவர்கள் பரிசோதனை செய்து கொண்டனர். முகாமில் கூட்டுறவு நகர வங்கியின் துணைபதிவாளர் பிரேம், துணை பதிவாளர் அன்பழகன், பொதுமேலாளர், நகர வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.