அரூர், ஜூலை 21: அரூர் பஸ் நிலையத்திற்கு அடுத்த கச்சேரிமேடு பகுதி மக்கள் அதிகம் கூடும் இடமாக உள்ளது. அரசு மருத்துவமனை, வட்டார வளர்ச்சி அலுவலகம், தாலுகா அலுவலகம், நீதிமன்றம், காவல் நிலையம், கூட்டுறவு வங்கி உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகளின் அலுவலகங்கள் இப்பகுதியில் உள்ளதால், எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. நகருக்குள் வரும் அனைத்து அரசு, தனியார் பஸ்களும் கச்சேரிமேடு வழியாக செல்வதால் பயணிகள் ஏராளமானோர் இங்கு காந்திருந்து பஸ் ஏறிச் செல்கின்றனர். ஆனால், அரூர் நகரில் பஸ் நிலையம் தவிர, வேறு எந்த பகுதியிலும் பொது கழிப்பிட வசதி இல்லை. எனவே, அரூர் நகர் பகுதியில் பொதுமக்கள் அதிகம் கூடும் கச்சேரிமேடு உள்ளிட்ட இடங்களில், பொது கழிப்பிடங்களை அதிகாரிகள் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பொது கழிப்பிடம் அமைக்க வலியுறுத்தல்
35
previous post