Friday, March 1, 2024
Home » பொது கணக்கு குழு கூட்டம்

பொது கணக்கு குழு கூட்டம்

by Karthik Yash

திருச்செங்கோடு, பிப்.8: ஓமந்தூரார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விடுதியில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை 2023-2024 பொது கணக்கு குழு கூட்டம் நடந்தது. இதில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அரசு முதன்மை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறை தலைவரின் அறிக்கையில் உள்ள தணிக்கை பத்திகள் தொடர்பாக, வேளாண்மை துறையிடமிருந்து வரப்பெற்ற விளக்க குறிப்புகள் குறித்து பொது கணக்கு குழு உறுப்பினர் கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்எல்ஏ விவாதித்தார். உடன் பொது கணக்கு குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், சட்டப்பேரவை செயலாளர் மற்றும் பொது கணக்கு குழு அலுவலர்கள் இருந்தனர்.

You may also like

Leave a Comment

5 + 7 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi