போடி, ஜூலை 21: போடியில் பொது இடத்தில் அவதூறாக பேசிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். போடியில் உள்ள ரெட்ட வாய்க்கால் அருகிலும், அடுத்துள்ள தேவர் சிலை அருகிலும் சிலர் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து அவதூறாக பேசுவதாக போடி நகர் காவல் நிலைய எஸ்.ஐ அசோக்கிற்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, போடி அருகே உள்ள முந்தல் ஏடி காலனி சேர்ந்த முத்துச்சாமி மகன் முகேஷ் (25) என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த ராஜபூபதி (47) என்பவரும், சாலையில் நின்று போக்குவரத்துக்கு இடையூறாக நின்று அவதூறாக பேசிக் கொண்டிருந்தனர். போலீசார் அவர்களை எச்சரித்தும் அவர்கள் கேட்காததால் கைது செய்தனர்.