தஞ்சாவூர். ஜூலை. 4: தொடக்க கல்வித்துறையில் கண்துடைப்பாக 2025-26-ஆம் கல்வி ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை அறிவித்துவிட்டு மாநிலம் முழுவதும் நிர்வாக மாறுதல் என்ற பெயரில் விதிகளுக்கு புறம்பாக சட்ட விரோதமாக மாறுதல் ஆணைகளை நாள்தோறும் வழங்கிவரும் தொடக்க கல்வித்துறையை கண்டித்தும் தமிழ்நாட்டில் கல்வி நலன் கருதி ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான உச்சநீதிமன்ற வழக்கை விரைந்து முடிவுக்கு கொண்டு வந்து பதவி உயர்வுடன் கூடிய ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை நடத்திடவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.