வலங்கைமான்: வலங்கைமான் அருகே தென் குவளவேலி ஊராட்சியில் பழுதான மின்மாற்றியை சீரமைத்து கருகும் பயிரை காப்பாற்றி தர வேண்டும் எ்னறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வலங்கைமான் அருகே தென்குவள வேலி ஊராட்சி பிள்ளையார் கோயில் பகுதியில் ஆலங்குடி மின்வாரிய அலுவலக கட்டுபாட்டின் கீழ் 2 மின்மாற்றி பெட்டிகள் அருகருகே உள்ளது .100 கேவி மின் திறன் கொண்ட மின்மாற்றில் இருந்து, 10 மின் மோட்டார்களும் 63 கேவி மின்திறன் கொண்ட மின்மாற்றிலிருந்து 5 மின்மோட்டார்களும் பாசன வசதி பெறுகிறது. மேலும் இந்த மின்மாற்றுகளில் இருந்து தெரு விளக்குகள் மற்றும் மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கான மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.