திருத்துறைப்பூண்டி, செப். 11: திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் படம் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி மேலாண்மைக் குழு சார்பில் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் படம் வழங்கி பள்ளி மேலாண்மை குழு தலைவி தேன்மொழி பேசுகையில், அப்துல் கலாம் மாணவர்களுக்கு கற்பிப்பதை விரும்பினார். மாணவர்கள் கனவு காண வேண்டும். அவை பலிக்கும், அப்படி பலிக்கும் போது அவற்றை செயல்படுத்தி வெற்றி பெற வேண்டும் என்று கூறி வாழ்வில் சாதிக்க நினைக்கும் ஒவ்வொரு மாணவரும் அப்துல் கலாமை, முன் உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.
மேலும் கனவுகள் காணுங்கள், எல்லை இல்லாமல் கனவு காணுங்கள். அது தான் உங்களை உங்களது இலக்குகளை உங்களை நோக்கி இட்டு வரும். கனவுகள் இல்லாத மனிதன், வெற்று பாத்திரம் போல இலக்கு இல்லாமல் நடக்கும் கால்கள் போல கனவுகள் தான் உங்களை உயிர்ப்பிக்கும் என்று குறிப்பிட்டார். நிறைவாக பள்ளி மேலாண்மைக் குழு ஆசிரியர் பிரதிநிதி சந்திரசேகரன் நன்றி கூறினார். இதில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் மார்சிஸ் மரியாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.