திருமங்கலம் மே 28: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள மைக்குடி ஊராட்சிக்குட்பட்ட வினோப்பாநகர் பகுதியில் 100க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றன இந்த நிலையில் நேற்றுகாலை முதல் மின் சப்ளை பாதிக்கப்பட்டது. மின்வாரியத்தில் புகார் செய்தும் நேற்று இரவு வரை மின்சப்ளை வரவில்லை.
இதனால் பாதிப்பிற்கு உள்ளான பொதுமக்கள் வினோப்பாநகர் பஸ் ஸ்டாப் முன்பு நேற்று இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் திருமங்கலம் – காரியாபட்டி இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த திருமங்கலம் தாலுகா போலீசார் மைக்குடி வினோபா நகர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து கிராமமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.