ஈரோடு,செப்.3: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று மாலை மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட மகளிர் துணைக்குழு அமைப்பாளர் ஜி.சசிகலா தலைமை வகித்தார்.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் விஜயமனோகரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதில், கொல்கத்தாவில் முதுநிலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில துணை தலைவர் கு.குமரேசன் நிறைவுரையாற்றினார். இதில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ஆர்.சுமதி உள்பட கலந்து கொண்டனர்.