கரூர், ஆக. 3: கரூர் பிரபல தேங்காய் மொத்த வியாபாரி எஸ்.வி.ஆர். தேங்காய் மண்டி உரிமையாளர் எஸ்விஆர் என்று அழைக்கப்படும் எஸ்.வி.ராஜேந்திரன் (75). நேற்று மதியம் (புதுத்தெரு) கரூர் காமராஜர் மார்க்கெட் அருகில் உள்ள அன்னாரின் இல்லத்தில் காலமானார்.
அன்னாரின் இறுதிச்சடங்கு இன்று (3ம் தேதி) சனிக்கிழமை மாலை 3 மணி அளவில், அவரது இல்லத்தில் இருந்து புறப்பட்டு கரூர் பாலம்மாள்புரம் எரிவாயு மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது. உறவினர்கள், நண்பர்கள் தொழிலதிபர்கள் கலந்து கொண்டு மகன்கள் ஆர்.சதீஷ்குமார், ஆர்.சரவணகுமார், அண்ணன் மகன் கரூர் மாநகர மத்திய திமுக பகுதி பொறுப்பாளர் வி.ஜி.எஸ்.குமார் ஆகியோரிடம் இரங்கலை தெரிவித்தனர்