தேன்கனிக்கோட்டை, செப்.4: தேன்கனிக்கோட்டை போலீஸ் எஸ்ஐ ஜெய்கணேஷ் தலைமையிலான போலீசார், என்.கொத்தனூர் கூட்ரோடு பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் தகாத வார்த்தைகளை பேசிக் கொண்டு, பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்ததாக தேன்கனிக்கோட்டை அடுத்த நொகனூர் கிராமத்தை சேர்ந்த சசிக்குமார் (30) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் மீது 2021ம் ஆண்டு நடந்த கொலை வழக்கு ஒன்று, ஸ்டேஷனில் நிலுவையில் உள்ளது.