கீழ்வேளூர்: பொதுமக்களுக்கு எடுத்துக்கட்டாக அலுவலர், பணியாளர்களுக்கு ஹெல்மெட் அவசியம் என்று கீழ்வேளூர் பேரூராட்சி செயல் அலுவலர் குகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கீழ்வேளூர் பேரூராட்சியில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இருசக்கர வாகனங்களில் வரும் போது கட்டாயம் தலைகவசம் அணிந்து வரவேண்டும் என நேரிலும் மற்றும் வாட்சப் குழுவிலும் பலமுறை அறிவுரை அளித்திருக்கிறேன். ஆனால் எவரும் செவி சாய்க்கவில்லை. தலைகவசம் அணிந்து பயணிப்பது என்பது சாலை பாதுகாப்பு விதி மட்டுமல்ல.