புதுக்கோட்டை, ஜூன் 28: சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அரசு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவிகளுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. புதுக்கோட்டை, சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அஞ்சலிதேவி தங்கமூர்த்தி மற்றும் புதுக்கோட்டை தமிழ்ச்சங்கத்தின் தலைவரான தங்கம்மூர்த்தி மாணவிகளுக்கு பரிசுத் தொகையினை வழங்கி ஊக்குவித்தனர். பெண் குழந்தைகள் சாதனை படைக்க வேண்டும் என்றும் உயர்ந்த அரசு பதவிகளை வகிக்க வேண்டுமெனவும் வாழ்த்தி கவிஞர் தங்கம் மூர்த்தி சிறப்புரையாற்றினார்.
பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அஞ்சலி தேவி தங்கமூர்த்தி மாணவர்களை வாழ்த்தியதோடு அல்லாமல் சமூக அறிவியல் பாடத்தில் இரண்டு மாணவர்களை நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற வைத்த ஆசிரியர் மருதாம்பாள் பரிசுத் தொகையாக வழங்கி ஊக்கப்படுத்தினார். எதிர்வரும் கல்வி ஆண்டில் மாணவிகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை அதிகரிக்கப்படும் என்றும் மாணவிகள் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்றும் பாராட்டினார். பள்ளித் தலைமையாசிரியர் சுசரிதா, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.