பந்தலூர், மே 24: பந்தலூர் புனித பிரான்சிஸ் சேவியர் பெண்கள் உயர்நிலைப்பள்ளில் 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் சாதித்த மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. நீலகிரி மாவட்ட டாக்டர் அப்துல் கலாம், அன்னை தெரேசா அறக்கட்டளை சார்பாக பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் சாதனை புரிந்த மாணவிகளுக்கு பாராட்டு விழா பந்தலூர் புனித பிரான்சிஸ் சேவியர் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் டியூஸ் மேல்நிலைப்பள்ளி மற்றும் உப்பட்டி எம்எஸ்எஸ் உயர்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் சூசைராஜ் தலைமை வகித்தார். மகேந்திரன் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக தேவாலா காவல் நிலைய எஸ்ஐ கார்த்திக் கலந்துகொண்டு சாதித்த மாணவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சுபா சிஸ்டர், சுந்தரமூர்த்தி,ரஞ்சன் விக்னேஷ் மற்றும் ஆசிரியர், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.