கும்பகோணம், மே. 31: கும்பகோணத்தில் தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 352 மதிப்பெண்கள் எடுத்த கூலித்தொழிலாளியின் மகளின் குடும்பத்திற்கு உதவும் வகையில் ஒரே வாரத்தில் வீட்டுமனை பட்டா மற்றும் வீடு கட்டும் பணி ஆணையும் எம்எல்ஏ வழங்கினார்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட சோலையப்பன் தெருவில் வசித்து வருபவர் சடையப்பன், சித்ரா தம்பதியினர். விவசாய வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் திருப்பனந்தாளை பூர்வீகமாக கொண்டவர்கள். இவர்களுக்கு 5 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.