கமுதி, செப்.3: கமுதி அருகே செங்கப்படை கிராமத்தில் அழகு வள்ளியம்மன் கோயில் வருடாந்திர பொங்கல் மற்றும் முளைப்பாரி திருவிழா காப்பு கட்டி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து மூலவர் அழகு வள்ளியம்மனுக்கும்,கொடி மரத்திற்கும் பால், தயிர், சந்தனம்,இளநீர், பன்னீர், விபூதி, பஞ்சாமிர்தம் கும்ப நீர் அபிஷேகம் உள்ளிட்ட 16 வகையான மூலிகை திரவிய அபிஷே அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு, அம்மனுக்கு காப்பு கட்டிய பின்பு,நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்கள் அனைவரும் காப்புக் கட்டிக் கொண்டனர். வரும் 9ம் தேதி காலை கும்பம் எடுத்தல், இரவு 1008 திருவிளக்கு பூஜை, 10ம் தேதி பொங்கல் கரகம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நாளான 11ம் தேதி பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தல், பூக்குழி இறங்குதல், வேல் குத்துதல், சாக்கு வேடம் போடுதல் போன்ற நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
பொங்கல் விழா துவக்கம்
previous post