Friday, February 23, 2024
Home » பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று முதல் சிறப்பு சந்தை: நெரிசலை கட்டுப்படுத்த 250 போலீசார் குவிப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று முதல் சிறப்பு சந்தை: நெரிசலை கட்டுப்படுத்த 250 போலீசார் குவிப்பு

by Karthik Yash

அம்பத்தூர், ஜன. 11: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று முதல் சிறப்பு சந்தை செயல்பட உள்ளது. அங்கு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த 250 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் அங்காடி நிர்வாகம் சார்பில் இன்று முதல் 17ம் தேதி வரை சிறப்பு சந்தை செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுளது. இதேபோல் கரும்பு, மஞ்சள், இஞ்சி கொத்து ஏற்றி வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு பெரிய இடம் தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம்.

சிறப்பு சந்தையில் பொருட்களை வாங்க கூட்டம் அலைமோதும். எனவே அந்த நேரத்தில் கோயம்பேடு மார்க்கெட்டில் போக்குவரத்து பாதிக்கும் என்பதால், அதனை சரி செய்வதற்கு நேற்று அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி, கோயம்பேடு காவல் நிலைய போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தினகரன் மற்றும் சட்டம்- ஒழுங்கு இன்ஸ்பெக்டர் சசிராஜன் ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்களை கட்டுப்படுத்தும் பாதுகாப்பு குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. போக்குவரத்து மற்றும் சட்டம்- ஒழுங்கு போலீசார் 250 பேர் பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இன்று முதல் கோயம்பேடு சிறப்பு சந்தை செயல்பட உள்ளதால் அந்த இடத்தை அங்காடி நிர்வாக அலுவலர் இந்துமதி நேற்று ஆய்வு செய்தார். அப்போது, சிறப்பு சந்தைக்கு வரும் வியாபாரிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். சிறப்பு சந்தைக்காக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விழுப்புரம், கடலூர், சேலம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கரும்பு, மஞ்சள், இஞ்சி உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்கு வந்து குவிகின்றன. இதனால் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட தயாராகும் வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து அங்காடி நிர்வாகத்தினர் கூறுகையில், ‘‘கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தையின் போது வியாபாரிகள் போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையில் வியாபாரம் செய்யகூடாது. அங்காடி நிர்வாகம் கொடுத்த பகுதியில் மட்டுமே வியாபாரம் செய்ய வேண்டும். வியாபாரிகள் அங்காடி நிர்வாக குழுவுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்’’ என்றனர்.

You may also like

Leave a Comment

5 + eighteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi