சாயல்குடி, அக்.17: முதுகுளத்தூர் அருகே சித்திரங்குடி உலகநாயகி அம்மன் கோயில் புரட்டாசி மாத வருடாந்திர பொங்கல் மற்றும் முளைப்பாரி விழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று பக்தர்கள் தாம்பூல தட்டில் பூக்கள் வைத்து மேளதாளங்களுடன் ஊர்வலமாக வந்து அம்மனுக்கு மலர் அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து அம்மனுக்கு தங்க ஆபரண பெட்டி கொண்டு வரப்பட்டு ஆபரணங்கள் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு தீபராதனை நடைபெற்றது. மாலையில் முளைப்பாரியை பெண்கள் எடுத்து ஊர்வலமாக எடுத்துச் சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.