கலசபாக்கம், ஆக. 17: கலசபாக்கம் அருகே பச்சையம்மன் கோயிலில் நேற்று பக்தர்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். கலசபாக்கம் ஒன்றியம் காம்பட்டு கிராமத்தில் பிரசித்தி பெற்ற பச்சையம்மன் சமேத மன்னார் சாமி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்து பக்தர்கள் குலதெய்வ வழிபாடு செய்வது வழக்கம். ஆடி மாதம் வெள்ளி மற்றும் திங்கள் கிழமையில் பல்வேறு பகுதிகளில் இருந்து பெருந்திரளான பக்தர்கள் வருகை தந்து பொங்கல் இட்டு வழிபடுவர். அதன்படி நேற்று ஆடி வெள்ளியை கிழமையை யொட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மேலும் ஏராளமான பக்தர்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். தற்போது கோயில் திருப்பணி நடைபெற்று வருவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பழமை வாய்ந்த கோயில் குளம் சீரமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.