ஊட்டி, ஜூன் 30: ஊட்டி வட்டம், பொக்காபுரம் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில் தேசிய பழங்குடியினர் ஆணைய உறுப்பினர் ஜடோத்து ஹுசைன் ஆய்வு மேற்கொண்டார். பொக்காபுரம் அரசு உண்டு உறைவிட பள்ளியில் உள்ள ஆய்வகம், நூலகம் மற்றும் ஸ்மார்ட் வகுப்பு அறை, சமையில் அறை மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்களின் விடுதியின் அடிப்படை வசதிகளை உள்ளிட்டவற்றை தேசிய பழங்குடியினர் ஆணைய உறுப்பினர் ஜடோத்து ஹுசைன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பள்ளி மாணவர்களுக்கு ரெயின் கோட்டுகளை வழங்கியும், பசுமை படையின் சார்பில், நடத்தப்பட்ட ஒவிய போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணாக்கர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
பின்னர் பள்ளியில் கடந்த 2023-24 மற்றும் 2024-25 ஆகிய வருடங்களில் தொடர்ந்து 10ம் வகுப்பில், 100 சதவீத தேர்ச்சி பெற்ற பழங்குடியின பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தும், நாவா சங்கம் சார்பில் குழந்தைகள் நிதி திட்டத்தின் கீழ் 29 பள்ளி மாணவர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம், 2 டிப்ளமோ டிகிரி மாணவ, மாணவியர்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் வீதம், 2 கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் மற்றும் 1 கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு ரூ.10 ஆயிரம் வீதம், என மொத்தம் 34 நபர்களுக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.84 ஆயிரத்திற்கான காசோலையினை வழங்கியும் பழங்குடியினர் மாணவ, மாணவியிர்களின் கலைநிகழ்ச்சிகளை பார்வையிட்டார். நிகழ்ச்சியில் தேசிய பழங்குடியினர் ஆணைய இயக்குநர் கல்யாண் ரெட்டி, தனிச்செயலாளர் அசோக்குமார் லக்கரசு, முதுலை புலிகள் காப்பகம் துணை இயக்குநர் அருண், ஊட்டி ஆர்டிஒ சதீஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.