பவானி,ஜூன்24: பவானி அருகே உள்ள சித்தார்,மாணிக்கம்பாளையம் பிரிவு, ஆசாரி தெருவை சேர்ந்தவர் கதிர்வேல் (25). இவர், நேற்று முன்தினம் இரவு சித்தாரில் உள்ள பேக்கரி முன்பு பைக்கை நிறுத்தி விட்டு, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து ஹார்ன் அடித்துக் கொண்டிருந்தார்.
இதனால், அப்பகுதியினர் கேட்டபோது பைக் இன்ஜினை அதிகப்படியாக இயக்கி சத்தத்தை ஏற்படுத்தியுள்ளார். இதை தட்டி கேட்டவர்களை தாக்கிவிட்டு, தப்பியோடிவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கதிர்வேலை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.