பந்தலூர்: பந்தலூர் அருகே பைக் விபத்தில் பலியான போலீஸ் ஏட்டு உடலுக்கு மாவட்ட எஸ்பி தலைமையில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது. நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே சேரம்பாடி காவல்நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணி புரிந்தவர் எருமாடு கல்லிச்சால் பகுதியை சேர்ந்த சதீஷ் (40). இவர், நேற்று முன்தினம் தாளூர் பகுதியில் இருந்து சேரம்பாடி காவல்நிலையத்திற்கு பைக்கில் வந்துள்ளார். அப்போது, கப்பாலா எனும் இடத்தில் எதிரே வந்த லாரி மோதியதில் பலியானார். இவரது உடல் நேற்று கல்லிச்சால் பகுதியில் உள்ள அவரது சொந்த கிராமத்தில் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த இறுதி ஊர்வலத்தில் நீலகிரி மாவட்ட எஸ்பி பிரபாகர் கலந்து கொண்டு சதீஷ் உடலை மயானத்திற்கு சுமந்து சென்றார்.