குன்னம்,நவ.21:பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பரவாய் கிராமம் கிழக்கு தெருவை சேர்ந்த அய்யாவு மனைவி ராதிகா (38) கூலி வேலை செய்து வருகிறார். இவரது உறவினரான கொளப்பாடி கிராமத்தை சேர்ந்த சிவலிங்கம் மகன் செல்வராசு (50) . இருவரும் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் பெரம்பலூருக்கு சொந்தவேலையாக சென்று கொண்டிருந்தனர் அப்போது பேரளி பஸ் நிற்கும் இடம் அருகே செல்லும் போது பின்னால் வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் நிலை தடுமாறி விழுந்த ராதிகா தலையில் லாரியின் பின் சக்கரம் ஏறி சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்துள்ளார் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த செல்வராசு பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராதிகா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து லாரியை ஓட்டி வந்த அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை சேர்ந்த பாலமுருகன் (47) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.