திங்கள்சந்தை, நவ.8: பூதப்பாண்டி பட்டார்குளம் காலனியை சேர்ந்தவர் ஐயப்பன்(49). தக்கலை அரசு மருத்துவமனையில் பதிவறை எழுத்தராக வேலை பார்த்து வந்தார். கடந்த 31ம் தேதி காலை வேலைக்கு செல்வதற்காக பூதப்பாண்டியில் இருந்து பைக்கில் தக்கலை நோக்கி வந்து கொண்டிருந்தார். சுங்கான்கடை தாண்டி தோட்டியோடு ஜங்ஷன் அருகே வந்தபோது எதிரே வேகமாக வந்த கார் எதிர்பாராத விதமாக பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஐயப்பனுக்கு தலை, கால் ஆகிய பகுதிகளில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டது. சுய நினைவின்றி கிடந்த அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக களியங்காட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.