தஞ்சாவூர், ஜூலை 30: தஞ்சாவூர் மருத்துவமனையில் பைக் மாயமானது. தஞ்சை அருகே மருவூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (44). இவர், கடந்த 21ம் தேதி தஞ்சை ராசா மிராசுதார் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்த உறவினரை பார்க்க பைக்கில் வந்துள்ளார். பின்னர் ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள வாகன நிறுத்தும் இடத்தில் பைக்கை நிறுத்திவிட்டு மருத்துவமனைக்குள் சென்றார். மறுநாள் 22ம் தேதி திரும்பி வந்து பார்த்தபோது பைக்கைக் காணவில்லை. இதுகுறித்து தஞ்சை மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
பைக் மாயம்
68
previous post