அன்னூர், ஜூன் 23: அன்னூர் அருகே ஏ.எம். காலனியை சேர்ந்தவர் இர்பான் (33) இவருக்கு சொந்தமான மோட்டார் பைக்கை கடந்த 14ம் தேதி இரவு ஓதிமலை சாலையில் ஒரு கோழிக்கடை முன்பு நிறுத்திவிட்டு சிறுமுகை சென்று இருந்தார். சிறுமுகை சென்று திரும்பி வந்து பார்த்த போது தனது பைக் காணவில்லை என தெரிய வந்தது. இது குறித்து அன்னூர் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். இதனை அடுத்து போலீசார் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். இதில் அன்னூர், கூத்தாண்டவர் கோவில் வீதியைச் சேர்ந்த சாமிநாதன் மகன் ரகு என்கிற ஹரிஹரன் (32) மோட்டார் பைக்கை திருடியது தெரிய வந்தது. இதை அடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து மோட்டார் பைக்கை மீட்டு, அன்னூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.