நெல்லை,மே 27: நாங்குநேரி அருகே தளபதி சமுத்திரம், நல்லான்குளம், மேலதெருவை சேர்ந்தவர் கனவேல்(51). இவர் வள்ளியூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 25ம் தேதி கனகவேல் வேலை பார்க்கும் இடத்தில் பைக்கை நிறுத்தியிருந்தார்.
பின்னர் அன்று இரவு வேலையை முடித்துவிட்டு வந்து பார்த்த போது பைக்கை காணவில்லை. இதுகுறித்து கனகவேல் வள்ளியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் எஸ்ஐ சங்கர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். இதில் வள்ளியூர், காந்திஜி காலனியை சேர்ந்த கணேசன் (48) என்பவர் பைக்கை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து கணேசனை கைது செய்த போலீசார், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.