குடியாத்தம், ஜூலை 30: குடியாத்தம் அடுத்த சித்தூர் கேட் பகுதியில் டவுன் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சந்தேகப்படும்படி பைக்கில் வந்த 2 வாலிபர்களை தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் அவர்களை போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர்கள் குடியாத்தம் அடுத்த சேம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஆசிம்(23), கஸ்பா பகுதியைச் சேர்ந்த வசிகரன்(22) என தெரியவந்தது. மேலும், இவர்கள் 8 கிலோ செம்புகளை திருடியதும், இருவரும் வந்த பைக் திருட்டு பைக் என்பதும் தெரியவந்தது. பின்னர், போலீசார் இருவர் மீது வழக்கு பதிந்து கைது செய்து பைக் மற்றும் செம்புகளை பறிமுதல் செய்தனர்.