வேலூர், செப்.25: வேலூரில் பைக் ஓட்டிய சிறுவனின் உறவினரை போலீசார் கைது செய்தனர். வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் நேற்று பழைய மீன்மார்க்கெட் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பைக், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி அவற்றின் ஆவணங்களை சோதனை செய்தனர். அப்போது கணியம்பாடி பகுதியை சேர்ந்த 18 வயது நிரம்பாத சிறுவன் பைக் ஓட்டி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், சிறுவன் ஓட்டி வந்த பைக்கை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்தனர். அதில் சிறுவனின் உறவினர், அவருடைய நண்பரின் பைக் கொடுத்தது தெரிய வந்தது. இதுகுறித்து சிறுவனின் உறவினர் மற்றும் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் நிலையத்துக்கு வந்த சிறுவனின் உறவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
பைக் ஓட்டிய சிறுவனின் உறவினர் கைது வேலூரில்
previous post