பள்ளிப்பட்டு, ஜூலை 1: பள்ளிப்பட்டு அருகே, சங்கீதகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவன், விவசாயி. இவரது மகன் சின்னராசு (28). இவர் நேற்று முன்தினம் கிரிக்கெட் விளையாடிவிட்டு தனது பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, வெளியகரம் கிராமத்தில் நின்றிருந்த வாலிபர்கள் 2 பேர் சின்னராசுவிடம் லிப்ட் கேட்டுள்ளனர். அதற்கு சின்னராசு தனது பைக்கில் பெட்ரோல் இல்லை என்று கூறியதாக தெரிகிறது. லிப்ட் கொடுக்காததால் ஆத்திரமடைந்த வாலிபர்கள் சின்னராசுவை கை மற்றும் கற்களால் சரமாரியாக தாக்கியதில் அவர் காயமடைந்தார். இச்சம்பவம் குறித்து சின்னராசு அளித்த புகாரின் பேரில் பள்ளிப்பட்டு போலீசார் வெளியகரத்தைச் சேர்ந்த ராஜவேலு (34) என்பவரை நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர். இதில் தலைமறைவான அமரனை (24) தேடி வருகின்றனர்.
பைக்கில் லிப்ட் தராத வாலிபர் மீது தாக்குதல்
0