கேடிசி நகர், ஜூன் 11: கடையம் அருகே உள்ள கட்டேரிபட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் ஆனந்தப்பன் (52). மைக்செட் அமைக்கும் வேலை செய்து வந்தார். இவருக்கு மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் குமரி மாவட்டத்திற்கு மைக் செட் அமைக்கும் வேலைக்கு ஆனந்தப்பன் சென்றுள்ளார். அதன் பின்னர் நேற்று அங்கிருந்து பைக்கில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். கடையம் அருகே உள்ள சேர்வைகாரன்பட்டி ராமலிங்கபுரம் பகுதியில் எதிர்பாராத விதமாக பைக்கில் இருந்து ஆனந்தப்பன் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை ஆனந்தப்பன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கடையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பைக்கிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு
0
previous post