கேடிசி நகர், ஆக.4: பாவூர்சத்திரம் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த ெபண் பரிதாபமாக இறந்தார். பாவூர்சத்திரம் அருகே ராஜபாண்டியைச் சேர்ந்தவர் சுடலைஒளி. கட்டிட தொழிலாளி. இவரது மனைவி பார்வதி (46). இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். கடந்த 30ம் தேதி தென்காசியில் உள்ள தாயாரை, மகன் சுதனுடன் பார்வதி பார்க்கச்சென்றார். பின்னர் அதே பைக்கில் பாவூர்சத்திரத்துக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். பாவூர்சத்திரம் அருகே கேடிசி நகர் பகுதியில் பைக் வந்த போது, பலத்த காற்று வீசியதால் பின் இருக்கையில் அமர்ந்திருந்த பார்வதி நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் மூக்கில் பலத்த காயம் அடைந்த அவர், நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு நேற்று காலை அவர் இறந்தார். பாவூர்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தினர்.
பைக்கிலிருந்து தவறி விழுந்து பெண் பலி
previous post