பேரையூர், செப். 4: பேரையூர் பஸ் நிலையத்தில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு மையம், மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று கலை குழுவினர் மூலம் எய்ட்ஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இக்குழுவினர் தப்பாட்டம் ஆடியும், நாடகம் நடத்தியும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும் பொதுமக்களுக்கு எய்ட்ஸ் நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் தமிழக அரசு எய்ட்ஸ் நோயிலிருந்து தடுக்க பொதுமக்கள் நலன் கருதி எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தனர். இதில் பேரையூர், டி.கல்லுப்பட்டி அரசு மருத்துவமனை பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் டி.ராமநாதபுரத்திலும் நடைபெற்றது.