ராமநாதபுரம், பிப்.15: பேருந்து நிலையங்களில் பொருட்கள் வாங்கும்போது கவனமாக செயல்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் பொருட்கள் வாங்கும் போது, கடையில் உள்ள தராசு அரசால் முத்திரையிடப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். இரும்பு எடைகற்களின் அடிப்பாகம் தேய்க்கப்பட்டு உயரம் குறைக்கப்பட்டுள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். அதிகபட்ச சில்லறை விலையை கவனித்து வாங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.