கரூர்: எதிர்பாராமல் நடக்கும் பேரிடர் மகசூலை சரி கட்ட 11 வகை பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்யப்பட உள்ளது. நவ.15ம் தேதி கடைசி என கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்க முன்கூட்டியே காப்பீடு செய்யலாம் என்று கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம் 2016 பருவம் முதல் கரூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் 2023, 24ம் ஆண்டில் கரூர் மாவட்டத்தில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட இப்கோ டோக்கியோ பொது காப்பீட்டு நிறுவனம் லிட், சென்னை நிறுவனத்தால் செயல்படுத்தப்படுகிறது. தற்போது சிறப்பு மற்றும் ராபி பருவம் 2023, 24ம் ஆண்டுக்கு கருர் மாவட்டத்தில் சம்பா நெல், மக்காச்சோளம், சோளம், நிலக்கடலை மற்றும் கரும்பு பயிர்கள் அறிவிப்பு செய்யப்பட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது. சம்பா நெல் 11 பயிர் காப்பீடு செய்ய நவம்பர் 15ம்தேதி என காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.