பேராவூரணி, ஆக. 6: பேராவூரணி, மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அசோக்குமார் எம்எல்ஏ விலையில்லா சைக்கிள் வழங்கினார். பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு அசோக்குமார் எம்எல்ஏ தலைமை வகித்தார். ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 86 பேருக்கும், பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் 439 பேருக்கும் சைக்கிள்கள் வழங்கி பேசினார்.
அதேபோல், மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், 47 மாணவர்கள், 60 மாணவிகள் என மொத்தம் 107 பேருக்கு எம்எல்ஏ சைக்கிள்களை வழங்கினார். நிகழ்ச்சியில், பேரூராட்சித் தலைவர் சாந்தி சேகர், துணைத் தலைவர் பழனிவேல், டாக்டர் துரைநீலகண்டன், சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு தலைவர் முத்துமாணிக்கம், மல்லிப்பட்டினம் ஊராட்சித் தலைவர் ஜலீலா பேகம் முகமதுஅலி ஜின்னா, தலைமை பொதுக்குழு உறுப்பினர் அப்துல் மஜீத், மல்லிப்பட்டினம் ஜமாத் தலைவர் அல்லாப்பிச்சை, பள்ளி மேலாண்மை குழு தலைவர் ரஹ்மத் நிஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.