பேராவூரணி , மே 28: தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மணக்காடு ஊராட்சியில் , வீரக்குடி ஆதிதிராவிடர் தெருவில் ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்ட கோயில்விழா மேடை திறப்பு விழா நடைபெற்றது. எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட விழா மேடையை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து சீரமைப்பு பணி நடைபெற்று வரும் தர்ம ஊரணி மற்றும் பழுதடைந்து பயன்பாடற்ற நிலையில் உள்ள சமுதாயக் கூடத்தை எம்எல்ஏ பார்வையிட்டார். அப்போது, தர்ம ஊரணிக்கு சுற்றுச்சுவரும், புதிய சமுதாயக் கூடம் கட்டித்தரவும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.