பேராவூரணி ,ஜூன்.5: பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி வளர்ச்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் காளீஸ்வரி (பொ) தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எம்எல்ஏ அசோக்குமார் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகள் மூவருக்கு தலா ரூ.1,000 வீதம் ரூ.3 ஆயிரத்தை தனது சொந்தப் பணத்தில் இருந்து ஊக்கப் பரிசாக வழங்கி, பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்களிடம் பள்ளி வளர்ச்சி, மாணவிகள் உயர் மதிப்பெண் பெறுவது தொடர்பாக ஆலோசனை வழங்கி பேசியது, பள்ளிக்கு கூடுதல் கழிப்பறை வசதி, மாணவிகளுக்கு தேவையான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்தி தரப்படும். பள்ளிக்கு முன்னாள் எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பேருந்து நிறுத்தம் அமைத்து தரப்படும். உங்களிடம் இருந்து திருட முடியாத சொத்து ,கல்வி ஒன்றே எனவே, மாணவிகள் கல்வியிலும், ஒழுக்கத்திலும் சிறந்து விளங்க வேண்டும் என்று பேசினார். இதில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் குலாம் கனி, திருப்பதி, பழனிவேல், பள்ளி உதவி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.