குன்னம், ஜூன்28: பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பேரளி பகுதியில் சட்டவிரோத மதுவிற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி மருவத்தூர் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பன்னீர் செல்வம் மற்றும் அவரது குழுவினர் சிறப்பு ரோந்து பனியில் மேற்கொண்டு வந்த நிலையில் ஆலத்தூர் வட்டம் விஜய கோபாலபுரம் அபிமன்னன் மகன் மதியழகன் (37) அவரது அண்ணன் ராமு (40) ஆகிய இரண்டு நபர்களும் சட்டத்திற்கு புறம்பாக மதுபாட்டில்களை விற்பனை செய்துக்கொண்டிருந்தனர். அப்போது போலீசார் இருவரையும் கைது செய்து அவர்களிமிருந்த 180 மில் அளவுள்ள 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.