திருவிடைமருதூர்: திருவிடைமருதூர் அருகே திருக்கோடிக்காவல் மெயின் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகளை இன்ஸ்பெக்டர் பாலச்சந்திரன் தொடங்கி வைத்தார். தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் ஒன்றியம் திருக்கோடிக்காவல் ஊராட்சியில் 11 இடங்களில் புதிதாக கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. பந்தநல்லூர் இன்ஸ்பெக்டர் பாலச்சந்திரன் தலைமை வகித்து கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகளை தொடங்கி வைத்தார். ஊராட்சி மன்ற தலைவர் மோகன், முன்னாள் தலைவர் விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருக்கோடீஸ்வரர் சன்னதி தெரு, தேரோடும் 4 வீதிகள், மெயின் சாலை, ஊராட்சி அலுவலகம், வரசித்தி விநாயகர் கோயில் உள்பட 11 இடங்களில் ரூ.1.75 லட்சம் மதிப்பில் புதிதாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.