பேட்டை,ஜூன் 16: நெல்லை அருகே பேட்டையில் ரேஷன் அரிசி வெளிமார்க்கெட்டில் விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பதாக நெல்லை உணவு கடத்தல் தடுப்பு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணபாண்டிக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் துரை மற்றும் போலீசார் பேட்டை பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். இதில் பேட்டை ரகுமான்பேட்டையை சேர்ந்த திலீப் (25) என்பவரை பிடித்து நடத்திய விசாரணையில் பழையபேட்டை பகுதியில் 24 மூடை ரேஷன் அரிசி மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார், நெல்லையாபுரம் பகுதியில் ஒரு வீட்டில் பதுக்கி இருந்த 40 மூடை ரேஷன் அரிசி, புதுப்பேட்டை பகுதியில் மற்றொரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த 19 மூடை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்த போலீசார், திலீப்பை கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய சிலரை தேடி வருகின்றனர்.
பேட்டையில் 83 மூடை ரேஷன் அரிசி காருடன் பறிமுதல்
0
previous post