போச்சம்பள்ளி: மத்தூர் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர் முத்தரப்பு கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைமை ஆசிரியர் வாசுதேவன் தலைமை வகித்து, மாணவர்கள் கல்வி முன்னேற்றம் குறித்து பேசினார். மேலும், கற்றல் குறைபாடுடைய குழந்தைகளுக்கு மன நல ஆலோசனைகள் மற்றும் சிறப்பு வழிகாட்டுதல்கள் குதித்தும் பேசினார். நிகழ்ச்சியில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சின்னராஜ், ரவி, ஆஞ்சிமேரி, அகிலா, சகாதேவன், அருள்மொழி, பாரதிதாசன், அருள் மற்றும் தண்டபாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பள்ளி மேலாண்மை குழு தலைவர் சக்தி சாந்தகுமார் நன்றி கூறினார்.