Thursday, June 1, 2023
Home » பெர்ரி குடும்பம்…. பெரிய்ய குடும்பம்…

பெர்ரி குடும்பம்…. பெரிய்ய குடும்பம்…

by kannappan

நன்றி குங்குமம் டாக்டர் ஸ்பெஷல்சுவையும், சத்தும் மிகுந்த பெர்ரி பழங்கள் உலகம் முழுவதும் பரவலாகக் காணப்படுகிறது. இவைகளில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. மேலும் Anthocyanin என்னும் நிறமி பெர்ரி பழங்களின் நீலம், ஊதா மற்றும் சிவப்பு நிறத்திற்கு காரணமாக இருக்கின்றன. இவை அதிக ஆன்டி ஆக்சிடண்ட் குணங்களைக் கொண்டவை.அது மட்டுமின்றி இவை உடலில் உள்ள நோய்களை தடுப்பதிலும், குணப்படுத்துவதிலும் சிறந்து வழிவகுக்கின்றன. Anti aging வயது தொடர்பான நோய்களையும் இளமையும் பாதுகாக்க உதவுகிறது.பெர்ரி பழங்களை, பழங்களாக உண்பது உடலுக்கு மிகுந்த சத்துக்களை சேர்க்க உதவும், பழச்சாறாக பருகுவது பழங்களில் உள்ள நார்ச்சத்தை தவிர்ப்பதாகவும் பிற தாதுச்சத்துக்களும் அதில் அழிகிறது. அதனால் பழச்சாறாக அருந்துவதை தவிர்த்து விட்டு நேரடியாக நன்றாக தூய நீரில் அலசிவிட்டு சாப்பிடுவது நல்லது.பெர்ரி பழத்தில் என்னென்ன வகைகள் இருக்கின்றன என்பதையும், அதன் பலன்களையும் விவரிக்கிறார் டயட்டீஷியன் ப்ரீத்தா சங்கர்Acai Berryஅறிவாற்றலை மேம்படுத்தவும் மூளையின் செயல்பாடுகளுக்கும் உதவுகிறது. தினசரி உண்டுவந்தால் இதய நோய் மற்றும் மாரடைப்பு குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு குறையவும், நீரிழிவு கட்டுப்படுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். Anti cancerous Property பொதுவாகவே பெர்ரி பழங்களில் மிகுந்திருக்கும். அது இந்த Acai berries-களிலும் மிகுந்து காணப்படுகிறது. இவை. உடலில் உள்ள நச்சுக்களை(Toxins) வெளியேற்ற உதவுகிறது. Antioxidants மிகுந்து உள்ளது.BlackBerryபிளாக் பெர்ரி ஒவ்வொரு பிடியிலும் ஒரு விதை கொண்டுள்ள இளஞ்சிவப்பு இனிப்பு கூழ் கொண்டது. இவை வட அமெரிக்காவில் வணிக நோக்கத்துக்காக அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. நிறைய வைட்டமின், மினரல்கள், Antioxidants, நார்ச்சத்துக்கள் இருக்கிறது. இதில் இருக்கும் Xylitol என்னும் வேதிப்பொருள் ரத்தத்தின் சர்க்கரை அளவை நிலை நிறுத்த உதவுகிறது. மேலும் செரிமான ஆரோக்கியம், புற்றுநோயை தடுப்பு, சருமப் பாதுகாப்பு, நோய் எதிர்ப்பு சக்தி, இதய ஆரோக்கியம், எலும்புகளின் வலிமை, மூளை செயல்பாடுகள் ஆகியவற்றுக்கு உதவுகிறது.Oxygen உறிஞ்சுதல் திறன் அதிகம் கொண்டவை. Antioxidants அதிகம். உட்கொள்ளும்போது புற்றுநோய், இதய நோய், பக்கவாதம் மற்றும் அல்சீமர் நோயைத் தடுக்க உதவுகிறது. இப்பழத்தில் உள்ள Anthocyanins, நிறமி உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்ட உதவுகிறது. வட அமெரிக்காவில் கலிபோர்னியா, ஐரோப்பா போன்ற பகுதிகளில் மிகுந்து காணப்படுகிறது.Blue beeryBlue beery சூப்பர் ஃபுட் என்று அழைக்கப்படுகிறது. சிறந்த மூளை ஆரோக்கியம், ஆரோக்கியமான இதயம், உடல் எடையை குறைக்கவும், இதில் உள்ள; Antioxidants, உடலில் உள்ள நோய் ஏற்படுத்தும் முழு ஆபத்தையும் குறைக்கிறது. Vitamin K, C, Manganese போன்றவை நிறைந்திருப்பதால் தினசரி உடலுக்கு தேவைப்படும் சக்தி இவைகளில் இருந்து ஒரு பகுதி கிடைக்கிறது. அதுமட்டுமின்றி Vitamin – E, Vitamin B6 மற்றும் காப்பர் சிறிதளவு உள்ளது.Boysen berryஇவை ஐரோப்பிய ராஸ்பெர்ரி மற்றும் ஐரோப்பிய பிளாக்பெர்ரி கலப்பினத்தில் உருவானதாகும். ஆகையால், ராஸ்பெரி, பிளாக் பெர்ரி இரண்டின் சத்துக்களும் நமக்குக் கிடைக்கும். கருஞ்சிவப்பு நிறத்தைக் கொண்ட இந்தப் பழம் உடல் எடை இழக்க உதவுகிறது, சருமத்தைப் பாதுகாக்கவும், செரிமான பிரச்னை சரியாவதற்கும் பயன்படுகிறது. நீரிழிவு நோய் வராமல் தடுக்கவும், இருப்பின் குறையவும் பயன் செய்கிறது. கண்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவுகிறது.Choke berry(Aronia)அரோனியா என்பது பொதுவாக புதரில் வளரும் பெர்ரிக்களை குறிக்கிறது. சாப்பிட கொஞ்சம் கூர்மையாகவும், வாய்க்குள் ஒட்டும் தன்மை கொண்டதாக இருப்பதால் Choke berry என்று அழைக்கப்படுகிறது. இவை கருப்பு, ஊதா மற்றும் சிவப்பு நிறங்களில் காணப்படுகிறது. மார்பக புற்றுநோய் தொடர்பாக செல் சேதத்தை குறைக்க உதவுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. தசை மற்றும் ரத்த நாள ஆரோக்கியத்திற்கு உதவுவதால் ரத்த அழுத்தம் குறைகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது.Cran berryஇவை Blue berries குடும்பத்தை சார்ந்தவை. அதிகம் புளிப்புச் சுவை கொண்டது என்பதால் நேரடியாக சாப்பிடுவதை சிலர் தவிர்க்கிறார்கள். இதனால் பொடிகள், சாஸ்கள், உலர்ந்த பழமாகப் பயன்படுத்தப்படுகிறது. இனிப்பு மற்றும் பிற பழச்சாறுகளிளும் கலக்கக் கூடிய பழவகை. சிறுநீரக நோய்களை குணப்படுத்த சிறப்பு மிக்கதாக ஆய்வுகள் கூறுகின்றன.Cloud berryக்ளவுட் பெர்ரி மிகவும் சுவையான பழமாகும். இவை மேகம் போல் வடிவம் கொண்டவை சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம் காணப்படும். எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும், ரத்த சுழற்சியை மேம்படுத்தவும், உடலின் நச்சுக்களை நீக்கவும், இதய ஆரோக்கியத்துக்கும் இப்பழம் பயன்படுகிறது. எலும்பு ஆரோக்கியம் பெறவும் பெருமளவில் உதவி செய்வதற்கும் Cloud berries பயன் செய்கிறது என்று தற்போதைய ஆய்வுகள் கூறுகின்றன.Elder berryஇது சமைத்து சாப்பிட வேண்டிய ஒரு வகை பெர்ரி பழமாகும். உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாவிடம் இருந்து காக்கவும், நுரையீரலைப் பாதுகாக்கவும் வழி செய்கிறது. சூரிய கதிர்வீச்சினால் ஏற்படும் சருமப் பிரச்னையிலிருந்தும் காக்கிறது. இப்பழத்தை உணவில் சேர்ப்பதினால் மன அழுத்தத்தை சரி செய்வதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.Goji berryதற்போது அதிகம் பிரபலமாகி வரும் பழமாக Goji berry இருக்கிறது. ஊடகங்கள் இதனை ‘சூப்பர் ஃப்ரூட்’ என்று வர்ணிக்கின்றன. மிகவும் சுவையான பழம் என்பதும் கூட இதன் பிரபலத்துக்கு முக்கியமான காரணமாக இருக்கலாம். புரதச்சத்து இதில் அதிகப்படியாக உள்ளதால் மருத்துவத்துறையில் அதிகப்படியாக உபயோகத்தில் இருக்கிறது. சீன மருத்துவத்தில் 2 ஆயிரம் ஆண்டுகளாகப் பயன்படுத்துவதாகவும் குறிப்புகள் கிடைக்கப் பெற்றுள்ளது.Goose berryஇந்திய நெல்லிக்காய் மிகவும் சத்து மிகுந்து காணப்படுகிறது. மற்ற பெர்ரிக்களை விட நெல்லிக்காய் தனித்தன்மை வாய்ந்ததாகவும் திகழ்கிறது. கோடைக்கால பகுதியில் விளையக் கூடிய பழம். இவை வேகமாக வளரக் கூடிய செடிகள் ஒன்று. இந்தியாவில் வளரக் கூடிய நெல்லிக்கனியில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்சிடண்ட் அதிகம் காணப்படுகிறது. நரம்பியல் நோய்கள், புற்றுநோய், முதுமையடைதல் ஆகியவற்றிற்கு எதிராக செயல்படக் கூடியது.தொற்று நோய்களுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி உருவாவதற்கு உதவுகிறது. மருத்துவத் துறையில் மருந்துகள் தயாரிப்பதற்கும், அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பிலும் மிகப் பெரிய பங்கு வகிக்கிறது.Huckle berryதயாமின், நியாஸின், ரிபோஃப்ளாவின் போன்ற பல வைட்டமின்கள் இருக்கின்றன. இவை North America மற்றும் ஐரோப்பிய நாடுகளில் விளையக்கூடியவை. Vitamin C மிகுந்து காணப்படுகிறது. செல்கள் புத்துணர்வு பெறவும் புதிய செல்கள் வளரவும் பயன் செய்கிறது. ரத்த சுழற்சிக்கும், ரத்த குழாய்களில் உள்ள அடைப்பிற்கும், இதய நோய்களுக்கு மருத்தாகப் பயன்படுகிறது. இதயத்தில் ஏற்படும் Plaque Accumulation – ஐ தடுக்க உதவுகிறது.Lingo berryஇவை வடக்கு; ஐரோப்பியாவில் பரவலாக காணப்படுகிறது. உடல் எடை குறையவும், உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கவும், இதயநோய் வராமல் இருக்கவும் துணைபுரிகிறது. மிகுந்த ஆன்டி ஆக்சிடெண்ட் குணம் கொண்டது. வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் பெருகவும் பயன் செய்கிறது. உடலில் உள்ள சர்க்கரை அளவை சமமாக வைப்பதில் உதவுவதோடு, இன்சுலின் அளவையும் சமன் செய்கிறது.Logan berryமற்ற பெர்ரி பழங்களைப் போன்றே அதே மருத்துவப் பண்பு நலன்களைக் கொண்டவையாக உள்ளது. Osteoporosis, Arthritis, Lung disorders, குறிப்பாக ஆஸ்டியோபோரோசிஸ், ஆர்த்ரைட்டிஸ் போன்ற எலும்பு சார்ந்த பிரச்னைகளையும், மன நலக் கோளாறுகளையும் சரி செய்ய உதவுகிறது. வயிறு, மார்பக புற்றுநோய், தோல், நுரையீரல் போன்ற அனைத்து வகை புற்றுநோய்களையும் தடுக்கக் கூடியது.Rasberryராஸ்பெர்ரி இயற்கை சாக்லேட் என்று அழைக்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகள், ராஸ்பெர்ரிகள் பயன்பாட்டில் உள்ளது. இவை இனிப்பாகவும், சாறு மிகுந்தவையாகவும், சிவப்பு, கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் மட்டும் இல்லாமல் ஊதா மஞ்சள் நிறங்களிலும் காணப் பெறுகிறது. இவை உடல், நீரிழிவு, இதயநோய் மற்றும் உடல் நலன் பாதுகாக்கிறது. ஞாபக சக்தி அதிகரிக்க தூண்டுகிறது. இவை ரத்த அழுத்தம், குறையவும், சமன் செய்யவும்உதவுகிறது. உடலில் உள்ள கழிவுகளின் வெளியேற்றத்திற்கு உதவுகிறது.Mulberryஆசியா மற்றும் அமெரிக்காவில் காணப்படும். பட்டுப் புழுக்கள் உண்ணும் ஒரே உணவாக Mulberry இலைகள் திகழ்கிறது. அதற்காகவே இவை பயிர் செய்யப்படுகிறது. பரவலாக கருப்பு, சிவப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் நிறங்களில் பழங்கள் இருக்கும். பழச்சாறுகள், தேநீர், ஜாம் போன்ற உணவுகள் செய்யவும், இப்பழத்தினை உலரச் செய்து அப்படியே நாம் உண்ணலாம்.இரும்புச்சத்து, வைட்டமின் கே, பொட்டாசியம், வைட்டமின் சி மற்றும் ஈ உள்ளது. Mulberry anthocyanin , Chlorogenic acid, rutin nyricetin போன்றவை இருப்பதால் தோல், இதயம், புற்றுநோய், கொழுப்பு நீக்கவும், நீரிழிவு நோய் வராமல் இருப்பதற்கும் உதவுகிறது.Salmon berryஇளஞ்சிவப்பு நிறங்களில் பூக்கள் காணப்படும், இவை முற்போல் ஒரு பகுதி முடியிருக்கும். இவை RASBERRY போன்ற தோற்றத்தில் இருக்கும். Columbia கடற்கரை பகுதியிலும், மேற்கு; Washington பகுதியில் மக்களால் உணவில் அதிகம் சேர்க்கப்படுகிறது. Vitamin C அதிகம் உள்ளன. Calcium இருப்பதால் பற்கள் மற்றும் எலும்புகள் வலுபெற உதவி செய்கிறது. Fiber நார்ச்சத்து உடலில் உள்ள கொழுப்பு அளவை குறைக்கவும், கண்கள் திறன் பெறவும் உதவுகிறது. மற்ற berry போல் இதயம், தோல், சர்க்கரை நோய், புற்று நோய் வராமல் தடுக்கிறது.Strawberryஇவை உலகம் முழுவதும் விளையக்கூடிய எளிதில் கிடைக்கும் பெர்ரிக்களில் ஒன்று. சிவப்பு நிறம் கொண்டவை. புளிப்பு சுவை கொண்டது. அதிக அளவில் உணவில் உபயோகப்படும் முதன்மையான பெர்ரிக்களிலும் ஒன்று. சுவையான பால், ஐஸ்கிரீம், மில்க்ஷேக், ஸ்மூத்தி, யோகர்ட், கேக்குகள் செய்யவும் பயன்படுகிறது.நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கச் செய்கிறது. Vitamin C அதிகம் உள்ள பழங்களில் ஒன்று. ஆகையால் புற்றுநோய், மாரடைப்பு ஆகியவற்றைத் தடுக்கவும் பயன்படுகிறது. மேலும் ரத்த அழுத்தம் குறையவும், பார்வை தெளிவு பெறவும், எலும்பு மற்றும் பற்கள் வலுப்பெறவும் உதவுகிறது.Tay berryஸ்காட்லாந்து நதியான Tay என்னும் ஆற்றங்கரையில் விளைவதால் இதற்கு Tay berry என்ற பெயர் வந்தது. இவை Black berry மற்றும் சிவப்பு Rasberry-யின் கலவையினால் பிறந்த பெர்ரி பழமாகும். அதனால் அவ்விரண்டு பழங்களின் மருத்துவ குணங்களும் இதில் ஒன்றாக உள்ளது.– கவிபாரதி

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi