இலிமாய்: பெரு நாட்டின் எட்டு பாதுகாக்கப்பட்ட கடலோரப் பகுதிகளில் சமீபத்தில் 55,000 பெலிகன், பெங்குவின் பறவைகளின் சடலங்கள் கைப்பற்றப்பட்டன. அவற்றை ஆய்வு செய்ததில், அந்த பறவைகளுக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அதே கடல் பகுதிகளில் 585 கடல் சிங்கங்களும் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. அவையும் பறவை காய்ச்சல் இறந்தது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து ‘செர்னான்ப்’ வெளியிட்ட அறிக்கையில், ‘இறந்த கடல் சிங்கங்களின் உடலில் ஹெச்5என்1 வகை வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது’ என்று தெரிவித்துள்ளது. அதையடுத்து பெருவின் தேசிய வன மற்றும் வனவிலங்கு சேவை வெளியிட்ட அறிக்கையில், ‘கடற்கரையில் கடல் சிங்கங்கள் மற்றும் கடல் பறவைகள் பறவைக் காய்ச்சலால் இறப்பதால், அதனுடனான தொடர்பை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளிடம் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’ என்று வலியுறுத்தி உள்ளது….