திருப்பூர், செப். 1: திருப்பூர் மாநகரத்தில் பெருமாநல்லூர் சாலை முக்கிய சாலைகளில் ஒன்றாகும். இச்சாலையில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளில் ஒன்றாகும். குடிநீர் குழாய் அமைக்கும் பணி மற்றும் பாதாள சாக்கடை திட்டத்திற்காகவும் இந்த சாலை தோண்டப்பட்டு போக்குவரத்திற்கு ஏற்ற நிலையில் இல்லாமல் இருந்தது. நெடுஞ்சாலைத்துறையினரால் எடுக்கப்பட்ட நடவடிக்கையில் சாலை தற்போது முழுவதுமாக கான்கிரீட் போட்டு குழிகளை சமன் செய்து சீரமைக்கும் பணி இரவு நேரங்களில் நடைபெற்று வருகிறது. தற்போது, பெருமாநல்லூர் வரை சாலையில் குழிகள் ஏதுமின்றி பராமரிக்கப்பட்டுள்ளது.