தஞ்சாவூர், ஜூலை 7: பெருமாக்கநல்லூர் ஊராட்சியில் மண்டல கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் பாஸ்கரன் அறிவுறுத்தலின்படி கால்நடைகளுக்கு 7-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் துரை.ராமநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் நோய் புலனாய்வுத்துறை உதவி இயக்குநர் டாக்டர் தெய்வவிருத்தம், கால்நடை உதவி மருத்துவர் ரகுநாத், கால்நடை ஆய்வாளர் ராமச்சந்திரன் ஆகியோரை கொண்ட மருத்துவ குழுவினர் 150-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தினர். இதில் கால்நடை வளர்ப்போர் தங்களின் கால்நடைகளோடு கலந்து கொண்டனர்.