அந்தியூர், ஆக.18: கொல்கத்தா பெண் டாக்டர் படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அகில இந்திய மருத்துவ சங்கம் சார்பில் அந்தியூரில் நேற்று ஒரு நாள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் படுகொலை செய்யப்பட்ட டாக்டருக்கு மௌன அஞ்சலி செலுத்தினர். இதனைத்தொடர்ந்து, நேற்று டாக்டர்கள் கருப்பு பேட்ச் அணிந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். இருப்பினும், அவசரகால நோயாளிகளுக்கு மட்டும் சிகிச்சை அளித்தனர். இதில், அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் 20க்கும் மேற்பட்டோர் பணி பாதுகாப்பு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெருந்துறை அருகே மலர் தூவி வரவேற்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த டாக்டர்கள் மௌன அஞ்சலி செலுத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை
previous post