ஈரோடு, ஜூன் 17: ஈரோடு மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட பெருந்துறை கோட்டத்தில் மாதாந்திர மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம் நாளை (21ம் தேதி) பெருந்துறை கருமாண்டிசெல்லிபாளையம் சேனிடோரியத்தில் உள்ள மின் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்திற்கு ஈரோடு மேற்பார்வை பொறியாளர் கலைச்செல்வி பங்கேற்று, மின் பயனீட்டாளர்களின் குறைகளை கேட்டறிய உள்ளார். எனவே, இந்த கூட்டத்தில் பெருந்துறை, வெள்ளோடு, ஈங்கூர், கொடுமணல், சென்னிமலை, கவுண்டச்சிபாளையம், குன்னத்தூர், விஜயமங்கலம், பிடாரியூர், புதுப்பாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மின் பயனீட்டாளர்கள் தங்களது மின்சாரம் சார்ந்த குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.