ஏரல், மார்ச் 11: உலக மகளிர் தினத்தையொட்டி பெருங்குளத்தில் அங்கன்வாடி பெண் பணியாளர்களுக்கு தமிழக வெற்றி கழகத்தினர் சேலை மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கினர். தவெக சார்பில் ஏரல் அடுத்த பெருங்குளத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அங்கு பணியாற்றும் பெண் பணியாளர்களுக்கு தமிழக வெற்றி கழகத்தினர் சேலை மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கினர். நிகழ்ச்சிக்கு விவசாய அணி மாநில நிர்வாகி காந்திமதிநாதன் தலைமை வகித்தார். வை. சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ஜெகன்ராஜ் முன்னிலை வகித்தார். அங்கன்வாடியில் பணியாற்றும் பெண்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு மாவட்ட நிர்வாகியான ஏரல் அன்னை சரவணன் மகளிர் தின வாழ்த்து கூறி சேலை மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு நிர்வாகிகள் ஜோதிலட்சுமி, வக்கீல்கள் சுவேதா, ஈஸ்வரி, வை. மேற்கு ஒன்றியச் செயலாளர் பெருங்குளம் சுடலை, நகரச் செயலாளர் சுரேஷ், மாவட்ட செயற்குழு நிர்வாகி ஏரல் உமா கார்த்திக், பண்டாரவிளை இமான், ஆழ்வை ஒன்றியச் செயலாளர் பலவேசம் மற்றும் புளியங்குளம் விஜய் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பெருங்குளம் அங்கன்வாடி பணியாளர்களுக்கு பரிசு
0