ஆட்டையாம்பட்டி, ஆக.7: ஆட்டையாம்பட்டியில் உள்ள எட்டுப்பட்டி பெரிய மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழா வரும் 14ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக கடந்தவாரம் கோயிலில் கம்பம் நடப்பட்டது. நேற்று தேருக்கு ஆயக்கால் நடப்பட்டு, சிறப்பு பூஜை நடைபெற்றது. தேரினை அலங்கரிக்கும் பணி தொடங்கி உள்ளத. இப்பணிகளை கோயில் தர்மகர்த்தா ராஜ்மோகன் தலைமையில் மேற்கொண்டு வருகின்றனர்.